பொலிஸார் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தலாமா?

பொலிஸார் தனது உத்தியோகபூர்வ சீருடையில் இருக்கும்போது சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால், உயிர் பாதுகாப்பிற்காக பதில் தாக்குதலை நடத்தக்கூடிய அதிகாரம் சட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை இன்று ஊடகமொன்றுடன் நடத்திய நேர்காணலின்போது தெரிவித்துள்ளார்.

மஹரகம பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி, நேற்று வீதியில் வைத்து பட்டப்பகலில் நபர் ஒருவர் மீது மல்யுத்த வீரரைப்போல தாக்குதல் நடத்தும்வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட அதேவேளை, இன்று நுகேகொடை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த தாக்குதலுக்கு இலக்காகிய நபரால் பதில் தாக்குதலை பொலிஸார் மீது நடத்தியிருக்கலாமா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, முடியும் என்று அவர் பதிலளித்திருக்கின்றார்.

குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 92, 93ஆம் பிரிவுகளில் அதற்கான விளக்கம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரி தனது கடமையில் இருக்கும்போது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தினால் மட்டுமே பொதுமக்களால் தற்காப்பு வழிகளை பயன்படுத்த முடியும் என அஜித் ரோஹண தெளிவுபடுத்தினார்.

நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது, இது நியாயமான முறையில் செயல்படுத்தப்படும் என காவல்துறை அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like...