பௌத்த தேரர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்
மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னணி பெளத்த தேரர்கள் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த பெங்கமுவே நாலக்க தேரர், முருந்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட தேரர்கள் இவ்வாறு கடிதத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.
இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அரசாங்கம் நடக்கக்கூடாது எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.