பொலிஸார் போட்டுள்ள விஷேட திட்டம் – ஏப்ரல் 01 முதல் அமுல்

தமிழ் ​செய்திகள் இன்று


பொலிஸார் போட்டுள்ள விஷேட திட்டம் – ஏப்ரல் 01 முதல் அமுல்

எதிர்வரும் புத்தாண்டுக் காலங்களில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட போக்குவரத்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன் ஒரு அம்சமாக தூரப் பிரதேச பஸ் சேவைகளில் சிவில் உடை தரித்த அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில திட்டமிடப்பட்ட குழுக்களினால் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது அவர் குறிப்பிட்டார்.

அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.