அமெரிக்க வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து பல மில்லியன் பணத்தை மோசடி செய்தவர் கைது

அமெரிக்காவில் உள்ள வங்கி கணக்குகளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட 41வயதான சாவகச்சேரியை சேர்ந்த நபரொருவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (31) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தனியார் வங்கி கணக்கில் 13.4 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சந்தேகநபர் அமெரிக்காவிலுள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் சந்தேகநபர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடிக்கு உதவி செய்த நண்பருக்கும் சந்தேகநபர் பணம் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு 140 மில்லியன் ரூபா பணம் உள்நாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...