இலங்கையில் மாடறுப்பு தடை விரைவில் சட்டமாகிறது

இலங்கையில் மாடறுப்பு தடை தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் தற்போது சட்டமா அதிபருடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தி மோர்னிங் செய்தித்தாள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாடறுப்பு தடையை முன்மொழிந்ததுடன், கடந்த 2020 செப்டம்பரில் இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

இறைச்சிக்காக கால்நடை அறுப்புக்கு தடை விதிக்கப்படும் அதேவேளை வௌிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இலங்கையில் மாடறுப்பு தடை சட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான இறுதி வரைவு குறித்து சட்டமா அதிபருடன் ஆராய்ந்து வருவதாக புத்தசாசனம் மற்றும் மத, கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன கூறினார்.

பால் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க கால்நடைகளை அறுப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது என்று பேராசிரியர் கபில குணவர்தன கூறியுள்ளார்.

தற்போது, ​​இறைச்சிக்காக கால்நடைகளை அறுக்கிறவர்கள், பசு மற்றும் கன்றுகளை அறுக்கிறார்கள். இதனால் பால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் வயதான மாடுகளின் பிரச்சினை தீர்க்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் உள்ளன என்று பேராசிரியர் குணவர்தன கூறினார்.

மாடறுப்பு தடை தொடர்பான முந்தைய செய்திகள்

மாடறுப்பு தடை எப்போது அமுலாகும்? – வௌியான புதிய தகவல்

மாடறுப்பு தடை சட்ட யோசனை தொடர்பில் ஒரு மாதத்தில்…

மாடறுப்பு தடை ​- பிரதமரின் தீர்மானத்தை பாராட்டும் இராதாகிருஷ்ணன்

You may also like...