மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விஷேட செய்தி
மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்று(31) முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பகிக்கப்படவுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிள் சோதனை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் மேற்கொள்ளப்படும் வீதி ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் தரம் மற்றும் அவை இயங்கும் நிலை என்பவற்றை ஆராய்வதற்கே இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வதே இந்த சோதனையின் நோக்கமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.