ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கையை தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ளது.

பொலன்னறுவ , திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

இன்று மாலை 04 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 36 மணி நேரத்தில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடிய கால நிலை இல்லை என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் – வளிமண்டலவியல் திணைக்களம்

You may also like...