சஹ்ரான் ஹாசிமின் கொள்கையை பரப்பிய நால்வருக்கு ஏற்பட்ட நிலை

சஹ்ரான் ஹாஷிமின் கொள்கை பிரசாரங்களை பகிர்ந்தமை மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் சஹ்ரான் ஹாசீமுடைய சிந்தனைகள் மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் விதமாக செயல்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் தீவிரவாதம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்று பொலிஸச ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

சந்தேகநபர் ஒருவர் 31 வயதான வெல்லம்பிட்டியில் வசிப்பவர், மற்றவர் 32 வயதான திஹாரியாவில் வசிப்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...