நுவரெலியாவில் கோர விபத்து – மூன்று பெண்கள் பலி

நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டியின் மீது கனரக லொறியொன்று மோதுண்டு குடைசாய்ந்ததில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண்கள் பலியனதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி செயற்படாமல் போனதால், முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தொிவித்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 51, 52 மற்றும் 20 வயதுடைய பெண்கள் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனரக வாகனத்தின் சாரதி சம்பவத்தின் பின்னர் தப்பியோடியுள்ளதாகவும், அதன் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கனரக வாகன சாரதியின் கவனயீனத்தினாலேயே விபத்து இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

You may also like...