பண்டாரவளை நகரத்தை பரபரப்பாக்கிய அக்குரணையில் இருந்து ஓடிவந்த வந்த ஜோடி

தாக்குதலுக்கு இலக்கான சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று காரணமாக நேற்று (31) மதியம் பண்டாரவளை நகரில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையால் இராணுவ வெடிகுண்டு அகற்றும் குழுவும் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றுள்ளது.

குறித்த வேன் விகாரை ஒன்றுக்கு அருகில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அங்கு பரபரப்பு நிலை தோன்றியுள்ளது.

பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி வாகனத்தில் வந்த ஒரு காதல் ஜோடி உட்பட நான்கு பேர் பண்டாரவளை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த குறித்த காதல் ஜோடியின் காதலுக்கு உறவினர்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் ரகசியமாக அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.

அவர்களுக்கு துணையாக இன்னொரு ஜோடியும் வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அக்குரணையில் இருந்து தப்பி வரும் வழியில் திகன நகரில் வைத்து இவர்கள் உறவினர்களால் தாக்கபட்டு வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளைக்கு தப்பி சென்ற இவர்கள் புஷ்பராம விகாரைக்கு முன்னால் வேனை நிறுத்திவிட்டு சென்றதை அடுத்து அப்பகுதியில் வசிப்பவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியதோடு அதில் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிந்த நிலையிலேயே பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் விசாரணையின் பின்னர் நால்வரும் பாதுகாப்பாக வெளியேற பொலிஸார் அனுமதி அளித்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

You may also like...