ஜனாதிபதி சட்டத்தரணி எனக் கூறிய நபர் ஒருவர் செய்துள்ள காரியம்
ஜனாதிபதி சட்டத்தரணி என்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , குறித்த சந்தேக நபர் தன்னை ஜனாதிபதி சட்டதரணி என்றும், மேல் மாகாண சபையின் உறுப்பினர் எனவும் அடையாளப்படுத்திக் கொண்டு வீடு, காணி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்பின் பொரளை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து ஜனாதிபதி சட்டதரணியாக அடையாளம் படுத்தக் கூடிய இறப்பர் முத்திரை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.