பசிலுடன் மைத்திரி அணி நடத்திய முக்கிய பேச்சுவார்த்தை
மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (02) அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலசுகவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதுடன் அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர மற்றும் லஸன்த அழகியவண்ண ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பெசில் ராஜபக்ஷ, ஜீ.எல் பீரிஸ் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளானார்.
பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. மாகாண சபை தேர்தல் நடைபெறும் முறைமை தொடர்பாக இறுதி அமைச்சரவை தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்படவுள்ளது.