பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞர்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கை விரலைக் கடித்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் நாகவிஹாரையில் கடமையிலிருந்த பொலிஸா ருக்கும் அங்கு பணி புரிந்த இளைஞர் ஒருவருக்குமிடையில் நேற்று (02) இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .

இதனையடுத்து கைகலப்பாக அது மாறியுள்ள நிலையில் . பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கை விரலை குறித்த இளைஞர் கடித்துள்ளார்.

காயத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

You may also like...