மூன்று பிறப்புறுப்புக்களுடன் பிறந்த உலகத்தின் அதிசயக் குழந்தை; அதிர்ச்சியில் மருத்துவர்கள்

ஈராக்கில் 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்து அதிசயத்தை ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள் அதில் இரண்டை வெட்டி எடுத்துள்ளனர்.

குழந்தைகள் பிறக்கையில் பொதுவாக, கைகள் அல்லது கால்விரல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அல்லது அதிகமாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் பிறப்புறுப்புகளைப் பொறுத்தவரை, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் இருந்ததாக இது வரை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்

triphallia என்று அழைக்கப்படும் மூன்று பிறப்புறுப்புக்களுடன் குழந்தை பிறந்ததாக பதிவு செய்யப்பட்டது உலகில் மனித வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஈராக்கின் மொசூலுக்கு அருகிலுள்ள டோஹுக் நகரிலே இந்த குழந்தை பிறந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு பிரச்சனை காரணமாக அல்லது மரபணு தொடர்பான குறைபாடு காரணமாக குழந்தை குறைபாட்டுடன் பிறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மனிதர்கள் வரலாற்றில் இதேபோன்ற 3 பிறப்புறுப்புடன் குழந்தை பிறந்ததாக இதுவரை ஏதும் பதிவாகவில்லை என டாக்டர் ஷாகிர் சலீம் ஜபாலி கூறினார்.

பிறக்கும் 6 மில்லியன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் diphallia எனப்படும் இரண்டு பிறப்புறுப்புடன் பிறக்கும்.
ஆனால், முதன் முறையாக ஈராக்கின் டோஹுக் நகரில் 3 பிறப்புறுப்புடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் 3 பிறப்புறுப்பகளில் ஒன்று மட்டுமே செயல்பட்டது. மற்ற இரண்டு உறுப்புகளால் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றாலும் அதை அகற்றுவது நல்லது என மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

பின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் இரண்டு செயல்படாத பிறப்புறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டதாக டாக்டர் ஷாகிர் சலீம் ஜபாலி கூறினார்.

தகவல் – Iraqi baby makes history as the first human to be born with three penises

You may also like...