முடி உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

முடி உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? முடி உதிர்வு என்பது இப்போது சர்வசாதரணமாகிவிட்டது. குறிப்பாக இந்த முடி உதிர்வால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான்.

தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும். ஒரு வகையில் நாமும் கவரிமானைப் போலத் தான். எப்படி என்று கேட்குறீர்களா?

பொதுவாக கவரிமான் தன் உடம்பில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விடும் என்று சொல்வர். அதே போல் தான் நாமும். சொத்து, சுகம் பறிபோவதை விட, முடி பறிபோவதை நம்மால் தாங்கி கொள்ளவே முடியாது.

அவ்வாறு முடி கொட்டுவதைப் பற்றியும், அதனை தடுப்பதை பற்றியும் கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக அவரவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதில் அந்த அளவிற்கு முழு திருப்தி அடைவதில்லை.

முடி உதிர்வுக்கு முக்கிய காரணம்

உணவு பழக்கம், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை பொதுவான காரணங்கள் ஆகும்.

முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும் உணவுகள்

உலர்ந்த அத்திப்பழம்

கூந்தலின் ஆரோக்கத்தியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. இது இரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும்.

அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.

முடி உதிர்வதை தடுக்க உதவும் கறிவேப்பிலை

இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன.

கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை.

முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.

முடி உதிர்வதை தடுக்க உதவும் பூசணி

பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.

கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் உதவும்.

 

You may also like...