ஒரு முஸ்லிம் வாக்கு கூட இல்லை தனிச் சிங்கள பௌத்த வாக்குகள் மூலம் அமைக்கப்பட்ட அரசாங்கம்

ஒரு முஸ்லிம் நபரின் வாக்கு கூட இன்றியே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதாக எஸ்.பி திசாநாயக்க கூறியுள்ளார்.

முற்றுமுழுதாக தனிச் சிங்கள பௌத்த வாக்குகள் மூலமே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

பௌத்த தேரர்களின் ஆசிர்வாதத்துடனேயே கோட்டாபய ராஜபக்ஷ வெற்றபெற்றதாக அவர் கூறியுள்ளார்.

கெட்டம்பே ராஜோபவனாராம விகாராதிபதி கெப்பிடியாகொட சிறிவிமல தேரரை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி எந்தளவு வேலை செய்தாலும் அதனை அதிகாரிகளும் அமைச்சர்களும் முன்னெடுப்பதில்லை என்பதை தான் ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இது மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அரசாங்கம் என்று எஸ்.பி திசாநாயக்க கூறியுள்ளார்.

You may also like...