தூர பிரதேசங்களுக்கு செல்லும் பஸ்கள்களில் இன்று முதல் பொலிஸார்

கொழும்பில் இருந்து தூர பயணங்கள் செல்லும் பேருந்துகளை கண்கானிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் கொழும்பில் இருந்து பயணிக்கும் போருந்துகளில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிவததுள்ளார்.

இதேவேளை, வாகன விபத்துக்களில் நேற்றைய தினம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விபத்துக்களில் பெரும்பாலானவை உந்துருளி விபத்துக்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியானது நாட்டினுள் அதிகூடிய வாகன விபத்துக்களைப் பதிவுசெய்த காலப்பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...