உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இன்று வௌியான விஷேட அறிவிப்பு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்போது சிறையிலுள்ள நௌபர் மௌலவியே என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தினத்தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை தொடர்பில் தெளிவூட்டுவதற்காக கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாதங்களை ஊக்குவித்து சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினரை அடிப்படைவாதியாக மாற்றியமைப்பதற்காக நௌபர் மௌலவி செயற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You may also like...