விகாரைக்கு சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெளத்த பிக்கு

விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை குறித்த பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

கைதான பௌத்த குறித்த பிக்குவை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று (7) உத்தரவிட்டார்.

தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விஹாராதிபதி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் பகுதியில் உள்ள விஹாரை ஒன்றுக்குச் சென்ற 12 மற்றும் 14 வயதான இரு சிறுவர்கள், சந்தேக நபர் தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமது பெற்றோர்களுடன் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சந்தேக நபரான பௌத்த பிக்குவை இன்று (7) தம்பலாகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

You may also like...