தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை
தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கும் வர்த்தமானி அடுத்தவாரம் வெளியாக உள்ளது.
பெருந்தோட்டத் துறை அமைச்சின் செயலாளர் இதை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தேங்காய் எண்ணெயை பூர்த்தி செய்வதற்கு 80வீதம் வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படுகின்றது.
இலங்கையில் தேங்காய் எண்ணெயின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தென்னை மரங்கள் பற்றாக்குறையாக உள்ளது.
இதையடுத்து தென்னை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.