நிவ் டயமண்ட் கப்பலிடம் கேட்கப்பட்டுள்ள அபராதத் தொகை

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நிவ் டயமண்ட் கப்பல் மூலம் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்ட ஈட்டு தொகையான 3.423 பில்லியனை (19.022 அமெரிக்க டொலர்கள்) கப்பல் உரிமையாளரிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எரிபொருள் எடுத்துச் சென்ற MT நிவ் டயமண்ட் கப்பல் இலங்கை கடற்பரப்பில் வைத்து விபத்துக்கு உள்ளாகி இருந்தது.

இதன்போது ஏற்பட்ட எண்ணைக்கசிவு காரணமாக கடற்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு செலுத்துமாறு கப்பல் உரிமை நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...