ரயில்வே திணைக்கள ஊழியர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

ரயில் திணைக்களத்துக்கு உள்ளேயே புதிய பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரயில் திணைக்களத்துக்கு வெளியிலேயே புதிய பொது முகாமையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...