இராணுவத் தளபதி பொதுமக்களுக்கு விஷேட அறிவிப்பு
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பொது மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிகளையும் பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.