பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

பொடுகு தொல்லை நீங்க, பொடுகு தொல்லை தீர டிப்ஸ் (Podugu neenga tips in tamil) – பொதுவாக ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை பொடுகு தொல்லைதான்.

பொடுகு வர முக்கிய காரணம் (dandruff home remedies in tamil)

தலையில் பொடுகு வர காரணம் பல இருக்கின்றது. ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதினாலும், சரியாக தலை அலசாமல் இருப்பதினாலும், தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதினாலும் என பல காரணங்கள் இருக்கின்றது.

இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லை என்றால் முடி அதிகமாக உதிர ஆரம்பித்துவிடும்.

இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கு உப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. முக்கியமாக உப்பு சருமத்தை அழகுபடுத்த மட்டுமின்றி தலைமுடியில் இருக்கும் பொடுகையும் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

சரி இந்த பதிவில் பொடுகு நீங்க எளிய முறை (dandruff home remedies in tamil) என்னென்ன உள்ளன என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..!

பொடுகு தொல்லை தீர உப்பு,

உப்பு தலைமுடியில் இருக்கும் பொடுகை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. எனவே உப்பு இரண்டு ஸ்பூன் எடுத்து கொண்டு, சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு மைல்டு ஷாம்பு போட்டு தலை அலச வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில் குணமாகும்.

பொடுகு தொல்லை தீர மருதாணி இலை (dandruff home remedies in tamil)

1. வாரத்தில் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

2. பொடுகு நீங்க எளிய முறை (dandruff home remedies in tamil) நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து தலை தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகு பிரச்சனைக்கு தீர்வு

இந்த பொடுகு தொல்லை தீர எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

பொடுகு நீங்கி முடி வளர

பொடுகு குணமாக, இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசுங்கள்.

இந்த சிகிச்சை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.

பொடுகு தொல்லை தீர

பொடுகு நீங்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி, தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.

இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு, காலையில் எழுந்ததும், தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.

பொடுகு தொல்லை நீங்க

பொடுகு தொல்லை தீர (dandruff home remedies in tamil) குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கற்றாழை ஜெல்லை, தலைச் சருமத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து ஒரு ஷாம்புவை கொண்டு தலையை அலசிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகு தொல்லைக்கு தீர்வு

பொடுகு தொல்லை தீர – சில வேப்ப இலைகளை எடுத்து, அதை நன்கு பேஸ்ட் செய்து, அதனை அப்படியே தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்.

இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லை நீங்கி தலை முடி போஷாக்குடன் இருக்கும்.

You may also like...