முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்? இதோ இயற்கை மருத்துவம்

தமிழ் ​செய்திகள் இன்று


முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்? இதோ இயற்கை மருத்துவம்

முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம் என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் முகப்பரு பாதிக்கக்கூடியது. இது வாலிப வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் போது துவங்குகிறது.

அழகான முகத்தில் முதன் முதலில் முகப்பருக்களைப் பார்த்ததுமே சிலர் அதைக் கிள்ளி எறிய முயற்சி செய்வார்கள். இதனால் பருக்கள் அதிகமாகுமே தவிர குறையாது.

மேலும் சமயங்களில் அவை கருப்பு நிற தழும் பாக மாறி முகத்தின் நிறத்தையும் பொலிவையும் கெடுத்துவிட வாய்ப்புண்டு.

அதிலும் சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. எனவே இவற்றை ஆரம்பத்திலே கவனத்தில் கொள்வது நல்லது.

அந்தவகையில் முகப்பருவை போக்க கூடிய ஒரு சில இயற்கை முறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம்

லெமன் கிராஸ் எண்ணெயில் உள்ள சிட்ரல் என்னும் உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கவும் செய்யும்.

அதற்கு அந்த எண்ணெய்யை இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் நனைத்து முகப்பருக்களின் மீது தடவ வேண்டும்.

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.

இது சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அழுக்குகள் சருமத் துளைகளை அடைப்பதைத் தடுக்கிறது.

முக்கியமாக சரும தொற்றுகள் மற்றும் முகப்பருக்களைப் போக்குகிறது.

கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் முகத்தைக் கழுவ வேண்டும். இவை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கவும் செய்யும்.

சிறிது வெந்தய கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும்.

புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து அல்லது சாறு எடுத்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீரால் நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.