இலங்கை விமானப் படை வீரரின் மாபெரும் சாதனை – இரண்டாவது நபர்

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி பகுதிக்கு பாக்கு நீரிணையில் 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்கள் 28 செக்கன்களில் நீந்திக் கடந்து மீள திரும்பிய இரண்டாம் நபர் என ரொஷான் அபேசேகர சாதனை படைத்துள்ளார்.

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை ​நேற்று (10) அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

நேற்று அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த விமானப்படை வீரர் மொத்தமாக 59.3 கிலோ மீற்றர் தூரம் நீந்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

You may also like...