மருக்கள் நீங்க என்ன செய்வது? முகத்தில் உள்ள மரு மறைய இதோ டிப்ஸ்

மருக்கள் நீங்க என்ன செய்வது? என்பது இன்று பலருடைய பிரச்சினை. அதன்படி இந்தப் பதிவில் நாம் உங்களுக்கு வழங்குவது முகத்தில் உள்ள மரு மறைய சில டிப்ஸ்.

மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி என்று இங்கு பார்ப்போம்

சிலருடைய சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும், இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும்.

இவற்றால் எந்த பிரச்சனை ஏற்படவில்லை என்றாலும் முகத்தில் உள்ள அழகையே இவை கெடுத்துவிடும்.

சருமத்தில் மருக்கள் உருவாக காரணம்

மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு ஆகிய பகுதிகளில் வரும்.இவற்றை மறைக்க நீங்கள் வீட்டிலேயே சில இயற்கையான பாட்டி வைத்திய முறைகளை கையாளலாம்.

இந்த மருக்களை ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் போக்கலாம்.

மருக்கள் நீங்க என்ன செய்வது? மருக்கள் உதிர எளிய வீட்டு குறிப்புகள்

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். தன் சாற்றை பிழிந்து மருக்களின் மேல் வைத்து வரலாம். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அன்னாசி பழத்தின் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு இதை பருக்கள் உள்ள இடங்களில் மட்டும் தடவி வந்தால், பருக்கள் விரைவில் காய்ந்து விடும்.

பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மருக்கள் உதிர பூண்டு

பூண்டை அரைத்து பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் ஒரு காட்டனை வைத்து துணியால் கட்டிவிட வேண்டும். கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். தினமும் மூன்று முறை செய்து வர, சருமத்தில் உள்ள பருக்கள் காய்ந்துவிடும்.

மருக்கள் உதிர வெங்காயம்

வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். இதனை தினமும் செய்து வந்தால் மருக்கள் விரைவில் உதிர்ந்துவிடும்.

இரவில் உறங்கும் முன்பு, வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

இதை தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் மருக்கள் விரைவில் உதிர்ந்துவிடும்.

முகத்தில் உள்ள மரு மறைய எலுமிச்சை

எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தேடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் அலசிக் கொள்ளலாம். இதனால் சருமங்களில் உள்ள மருக்கள் காய்ந்து உதிர்ந்து விடும்.

முகத்தில் உள்ள மரு மறைய – கற்றாழை

கற்றாழையில் உள்ள நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். கற்றாழை முகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தருவது மட்டுமில்லாமல் மருக்கள் உதிர வைக்கவும் செய்கிறது.

கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும். இதை தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்தால் போதும், மருக்கள் தானகவே உதிர்ந்து விடும். நீங்களும் இதை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள், மிக சிம்பிளான முறைதான்.

You may also like...