நீண்ட கூந்தலை வெட்டியதால் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

பெண் ஒருவரின் நீண்ட கூந்தலை வெட்டி அவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தி தலைமறைவாகி இருந்த நபர் ஒருவரை காலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கிங்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதானவர் ஆவார்.

கூந்தலை வெட்டிய அவமானத்தால் குறித்த பெண் விஷம் பருகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

45 வயதான குறித்த பெண் சந்தேக நபருடன் 10 வருடங்களாக திருமணத்துக்கு அப்பாலான உறவைப் பேணி வந்துள்ளதுடன், இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பெண்ணின் கூந்தலை வெட்டியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...