வாலால் நாயை வளைக்க முடியாது – நாய்தான் வாலை வளைக்கும்

ஆளும் அரசாங்கத்தில் உள்ள சிறு கட்சிகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

“எந்தவொரு கட்சிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த உரிமை உள்ளது. ஆனால் எங்கு முகமூடி அணிந்து போலி முகத்தை காட்டினாலும் வௌியில் தான் ஆட வேண்டும்.

நாம் எப்போதும் வௌியில் உள்ளோம். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு கட்சிக்கும் பயப்படவோ எந்தவொரு நபர் பின்னாலும் செல்லவோ மாட்டாது.

வாலால் நாயை வளைக்க முடியாது. நாய்தான் வலை வளைக்கும்” என்று ரோஹித்த அபேகுணவர்த்தன கூறினார்.

ஆளும் அரசாங்கத்தின் சிறு கட்சிகள் ஶ்ரீசுக அலுவலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களுக்கு களுத்துறையில் வைத்து கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

You may also like...