உடல் எடையை அதிகரிப்பது எப்படி? உடல் எடை அதிகரிக்க எளிய வழிகள்

உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்பது இன்று நம்மில் பலருக்கு இருக்கின்ற பிரச்சினை.

உடல் எடை என்பது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடை இருப்பது முக்கியம். மிக அதிகமான உடல் எடை கொண்டிருப்பதும் ஆபத்து தான். மிக குறைவான உடல் எடை கொண்டிருப்பதும் நல்லது கிடையாது.

குண்டு உடல்வாகோடு, உடல் எடை அதிகமாகி உடல்பருமனுக்கு ஆளாவது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது!

அப்படி மெலிந்திருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க (udal edai athikarikka tamil) செய்ய வேண்டியதும் அவசியமே!

உடல் எடை அதிகரிக்க வழிகள்

உடல் எடையைக் குறைக்க பல்வேறு விதமான வழிகள் சொல்லப்படுகின்றன. உணவில் இருந்து உடற்பயிற்சி வரை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் உடல் எடையை ஏற்றுவது சற்று சவாலான விஷயம்தான். இந்தப் பதிவில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி, உடல் எடை அதிகரிக்க எளிய வழிகள் என்னவென்று பார்ப்போம்.

உடல் எடையை அதிகரிக்க சில டிப்ஸ் – udal edai athikarikka tips

தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

உடல் எடை அதிகரிக்கும் உணவுகள் – weight gain foods in tamil

எள்ளு

மிகவும் மெலிதான எடை உள்ளவர்களுக்கு எள்ளு கைகொடுக்கும். இவர்கள் இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் எடை சிறப்பாக அதிகரிக்கும். எள்ளு சட்னி ,எள்ளுப்பொடி ,எள்ளுருண்டை போன்ற உணவுகளை இதிலிருந்து தயாரிக்க முடியும். எள்ளு ஒரு சுவையான உணவுப் பொருளும் கூட! ‘இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது நம் முன்னோர்களின் வார்த்தை என்பதை மறக்க வேண்டாம்.

சால்மன் மீன்

இந்த மீன்களில் புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. ஆக இதை வாரம் 2 முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த மீன்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.

அவகேடோ பழங்கள்

இந்த பழங்களில் கலோரிகள், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவு காணப்படுகின்றன. மற்ற உணவுகளைப் பொறுத்தவரையில் சமைத்துச் சாப்பிட வேண்டிய சூழல் இருக்கும். ஆனால் இது மாதிரியான பழங்களை எளிதாகச் சாப்பிட முடியும். தினம் ஒரு அவகேடோ பழத்தைச் சாப்பிடுவதன் மூலம், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் சத்து ,புரதச் சத்து , பல்வேறு விட்டமின்கள் மற்றும் கால்சியம் அதிக அளவு காணப்படுகின்றன. பால் , வெண்ணெய் ,தயிர் ,பாலாடைக் கட்டிகள் முதலியன பால் பொருட்களில் அடங்கும்.
உடல் எடையை அதிகரிக்க இவற்றைச் சாப்பிடுவது உகந்தது.

You may also like...