பொடுகு தொல்லைக்கு தீர்வு – பொடுகு வராமல் இருக்க என்ன செய்வது?

பொடுகு தொல்லைக்கு தீர்வு, பொடுகு வராமல் இருக்க என்ன செய்வது? என்பது பற்றி இந்தப் பதிவில் அலசுவோம்

இன்று பெரும்பாலானோருக்கு பொடுகு பிரச்சனை இருக்கிறது. பொடுகு என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும்.

சருமத்தின் செல்கள் இறக்கும்போது அவை உதிர்வது சாதாரணமான நிகழ்வுதான்.

ஆனால் பொடுகு வந்துவிட்டால் அதுவே பெரும் தலையிடியாக ஆகிவிடும். நம்மை எரிச்சலாக்கிவிடும்.

அவ்வளவு சீக்கிரம் போகாது. கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று இந்த பொடுகு.

பொடுகு ஏன் வருகிறது, பொடுகு வர காரணம் என்ன?

பொடுகு பிரச்சனை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. தலையையும் கூந்தலையும் சரியாக அலசாமல் இருந்தால், எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் உருவாகக் காரணமாகிறது. இது பொடுகு ஏற்பட வழிவகுக்கும்.

எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம்.

ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது.

எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது அல்லது அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களினால் பொடுகு ஏற்படும்.

அதிகமாக இரசாயனம் கலந்த ஷாம்பு பயன்படுத்தினாலும் தலையில் பொடுகு வரலாம்.
மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள் இதனாலும் பொடுகு ஏற்படலாம்.

இதுதவிர ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என பொடுகு ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன.

பொடுகு வராமல் இருக்க – பொடுகு வராமல் இருப்பதற்கு என்ன செய்வது

பொடுகு வந்த பிறகு என்ன செய்வது என்று யோசிப்பதை காட்டிலும் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வது வரும் முன் காப்பது போன்று முக்கியமானது.

ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.

தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும்.

இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.அதிகப்படியாக எண்ணெய் வைக்கும் போது எண்ணெய் படிவதால் பொடுகு அதிகரிக்க கூடும் அதனால் குறைந்த அளவு எண்ணெய் மட்டுமே பயன்படுத்துங்கள்.

பொடுகு இருக்கும் போது எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொடுகுக்கான பராமரிப்புக்கு பிறகு எண்ணெய் பயன்படுத்தலாம்.

கூந்தலில் பொடுகு இல்லாமல் கூட இருக்கட்டும். ஆனால் கூந்தலின் பொலிவு குறையாமல் இருக்கவும், கூந்தலில் இருக்கும் பூஞ்சைகள் நீங்கவும் கூந்தலை சுத்தம் செய்யவும் அவ்வபோது செய்ய வேண்டிய பராமரிப்பு மிகவும் முக்கியம்.

பொடுகு தொல்லைக்கு தீர்வு, பொடுகு நீங்க, பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தல் நல்ல பயன் பெறலாம்.

தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம்.வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.

வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து வந்தால் நல்ல பயன் பெறலாம்

வேப்பிலை சிறிதளவும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கலாம்.

You may also like...