பொலிஸார் மீது தாக்குதல் – பசறையில் சம்பவம்

பசறை நகர் பகுதியில் இன்று காலை சேவையில் ஈடுபட்டிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நடைபாதை வர்த்தகர் ஒருவரால் அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like...