ஒன்லைன் ஊடாக பொருட்களை வாங்குவோர் அவதானம்

இணையதளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அவதானத்துடன் செயற்படுமாறு, காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இணையதளம் ஊடாக பிரசுரிக்கப்படும் தனிநபர்களின் விளம்பரங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருடப்படும் அல்லது கொள்ளையிடப்படும் கைத்தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள், மின்சார உபகரணங்கள், கணினி மற்றும் பெறுமதியான வாசனைத் திரவியங்களை, குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஊடாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.

அவ்வாறான பொருட்கள், சாலைகளிலும், பொது இடங்களிலும் வைத்தே கொள்வனவாளர்களிடம் கையளிக்கப்படுகின்றன.

பொருட்களை கையளிப்பவர்கள், அதன் பின்னர் உடனடியாக தலைமறைவாகி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இணையதளத்தின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்பவர்கள், பொருட்களை விற்பனை செய்பவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

You may also like...