அதிவேக நெடுஞ்சாலையில் கிடைத்த வருமானம்

புத்தாண்டை முன்னிட்டு, கடந்த நான்கு நாட்களில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் மூலம், 135 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு பிரிவு பதில் பணிப்பாளர் நிஹால் லொட்றிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் பயணித்துள்ளன.

கடந்த 10 ஆம் திகதி 1,41,187 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.

இதனூடாக 38 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி, 1,37,721 வாகனங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.

இதனூடாக, 35 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு பிரிவு பதில் பணிப்பாளர் நிஹால் லொட்றிக் தெரிவித்துள்ளார்.

You may also like...