தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு வௌியான அறிவிப்பு

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல்களின் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்பு சபை இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று முன்தினம் (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகள்

1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)

2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)

3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)

4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)

5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா

6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா

7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா

8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் – தௌலா அல் – இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா

9. அல்கய்தா அமைப்பு

10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்

11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

You may also like...