முகத்தில் சுருக்கம் மறைய என்ன செய்ய வேண்டும்? முகச்சுருக்கம் நீங்க அழகு குறிப்பு

முகத்தில் சுருக்கம் மறைய என்ன செய்ய வேண்டும் என்பது இன்று பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சினை.

வயது ஏற ஏற முகத்தில் சுருக்கம் ஏற்படுவது இயற்கை. ஆனால், நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், முகச்சுருக்கத்தை சில வருடங்களுக்குத் தள்ளிப்போடலாம்.

இன்று சந்தையில் கிடைக்கும் பல தயாரிப்புகள், உங்கள் முகத்திற்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாலாம். இந்த தயாரிப்புகளில் பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.

இதற்கு பதிலாக இயற்கை பொருட்களை கொண்டு கூட முகச்சுருக்கத்தை மறைத்து உங்கள் சருமத்தை இளமையாக்கலாம். தற்போது முகத்தில் சுருக்கம் மறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

முகச்சுருக்கம் நீங்க என்ன செய்ய வேண்டும்

1. ஒரு கப் துளசி இலைகளை சிறிது நீரில் ஊறவைத்து மென்மையாக பேஸ்ட் பதத்துக்கு அரைத்து எடுக்கவும்.

1 டீஸ்பூன் அளவு கடலை மாவு, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி உலரவிடவும். பிறகு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.

2. மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் அளவு எடுத்து 1 டீஸ்பூன் தேன் கொண்டு, 1 துளி எலுமிச்சை எசென்ஷியல் ஆயில் சேர்க்கவும்.

அனைத்தையும் நன்றாக கலந்து ஃபேஸ் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து காய்ந்த பிறகு முகத்தை கழுவி எடுக்கவும்.

3. பட்டையை பொடியாக்கி 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் 1 டீஸ்பூன் அளவு தேனை கலந்து இரண்டையும் நன்றாக கலக்கி எடுக்கவும். பிறகு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.

4. தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் 3 அல்லது 4 சொட்டு கிராம்பு எண்ணெய் கலந்து முகத்தை சுத்தம் செய்த பிறகு முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுங்கள். நீராவி பிடிக்கும் போது கிராம்பு எண்ணெய் கலந்தும் கூட பிடிக்கலாம்.

5. இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இது கால் டீஸ்பூனில் பாதி  அளவு போதும். பிறகு அதில் 4 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை, 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு குழைத்து விடுங்கள்.

இந்த கலவையுடன் முகத்தை 10 நிமிடங்கள் துடைத்து விடுங்கள். பிறகு மீண்டும் இலேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்து விடுங்கள். பிறகு மந்தமான நீரில் கழுவி எடுங்கள்.

இது வயதான அறிகுறிகளை தடுக்க உதவுகின்றன.

You may also like...