வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது.

இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் தர்பூசணி, கிருணிப் பழ ஜூஸ் என்று படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள், கோடையில் உடலுக்கு நலம் தரும் உணவுகள் பற்றி இங்கே காண்போம்.

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

நீர் நிறைந்த குளிர்ச்சியான காய்கறி வெள்ளரி. கோடைக் காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும் சிறந்த காய்கறி.

குறைந்த கலோரி கொண்ட வெள்ளரியை கோடையில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் தண்ணீர் சத்து பாதுகாக்கப்படும். உடல் எடையும் குறையும்.

எலுமிச்சை ஜூஸ்

கோடையில் பலரும் விரும்புவது சில் என்ற எலுமிச்சை ஜூஸ்தான். வெயிலில் கலைத்து வருபவர்களுக்கு எலுமிச்சை ஜூஸில் உள்ள சர்க்கரை சத்து உடனடி ஆற்றல் அளிக்கும். எலுமிச்சை புத்துணர்வு அளிக்கிறது.

உடலை குளிர்விப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது எலுமிச்சை ஜூஸ். உச்சி வெயிலில் அலைந்துவிட்டு அதிக சில் என்று ஜூஸ் அருந்த வேண்டாம்.

அது வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்திவிடும். மிதமான குளிர்ச்சி கொண்ட ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.

தர்பூசணி

ஆண்டு முழுவதும் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட தர்பூசணி கிடைக்கிறது என்றாலும் கோடையில் கிடைக்கும் சுவையான நம் ஊர் தர்பூசணிக்காக பலரும் காத்திருப்பது வழக்கம்.

தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி பழம் என்று கோடையில் கிடைக்கும் பழங்கள் நம்முடைய உடலுக்கு நீர்ச்சத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன.

உடலை, வயிற்றை குளிர்ச்சியடைய செய்து, செரிமானத்தை மேம்படுத்த இவை உதவுகின்றன.

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.

வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது, மேலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது.

ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்.

பயறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை, கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை.

சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடுவதை அறவே தவிர்த்திட வேண்டும். கோதுமை, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

You may also like...