முகத்தில் உள்ள மரு மறைய எளிய வழிகள் இதோ!

முகத்தில் உள்ள மரு மறைய எளிய வழிகள் என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம் –

சரும பிரச்சனைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்க கூடியதாகும். அதில் முக்கியமான ஒன்று தான் சருமத்தில் வரும் மருக்கள் பிரச்சினை.

இந்த மருக்கள் உங்களது அழகினை குறைத்து காட்டும். உடல் பகுதிகளில் மருக்கள் இருந்தால் கூட பரவாயில்லை.. அதுவே முகத்தில் இருந்தால், உங்களது முகத்தின் தோற்றத்தையே இந்த மருக்கள் மாற்றி காட்டும்.

இந்த மருக்களை நீக்க சில பார்லர் டிரிட்மெண்டுகளும் உள்ளன. ஆனால் பலர் பார்லர் டிரிட்மெண்ட் என்றாலே பயப்படுகின்றனர்.

நீங்கள் பார்லர் சென்று இந்த மருக்களை நீக்குவதாக இருந்தாலும் கூட நல்ல தரமான பார்லருக்கு சென்று நன்கு பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணரிடமே சிகிச்சை பெற வேண்டும்.

இத்தனை சிரமம் எதற்கு என்று கருதுபவர்கள் வீட்டிலே மிக சீக்கிரமாக இந்த பருக்களை நீக்கி விடலாம்.

நீங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் தொடர்ச்சியாக இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு முறையை முயற்சி செய்து பாருங்கள். இதற்கான பலன் நிச்சயமாக சீக்கிரமே கிடைக்கும்.

முகத்தில் உள்ள மரு மறைய எளிய வழிகள்

இஞ்சி

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

அன்னாசி இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும்.

அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆளி விதைகள்

ஆளி என்ற விதையை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தினமும் பருவில் தடவிவர வேண்டும். அவ்வாறு தடவி வந்தால் மரு நாளடைவில் கொட்டிவிடும். பேஸ்டை தடவி விட்டு அதன் மேல் பேண்டேஜ் ஒட்டினால் மிக நல்லது.

கற்பூர எண்ணெய்

கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும்.

மேலும் மருக்கள் வளராமல் தவிர்க்கலாம் கற்பூர எண்ணை கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்தும் பூசலாம்.

மருக்கள் மறைய சுண்ணாம்பு

சுண்ணாம்பும் சரும பிரச்சனைகளை போக்க ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.

பெரிய மருக்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்

அம்மான் பச்சரிசி மூலிகை

பெரிய மருக்களை நீக்குவதற்காக பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. அதற்கு அம்மான் பச்சரிசி என்ற மூலிகையுள்ளது.

இது மணற்பாங்கான இடங்களிலும் வயல் காட்டிலும் விளையக்கூடியது. பூமியின் மீது படர்ந்திருக்கும். இத்தாவரத்தை கிள்ளினால் அதில் இருந்து பால் வரும்.

அந்தப்பாலை தினமும் மருவின் மீதும் முகப்பருக்கள் மீதும் தடவி வந்தால் முகப்பரு மற்றும் மருக்கள் காணாமல் போகும்.

கொஞ்சம் அதிகமாக பால் எடுத்து நிறைய மருக்கள் உள்ளபகுதிகளில் தடவினால் முகப்பருக்களோடு சேர்ந்து மருவும் சென்று விடும். தடயமும் மறைந்து விடும்.

Maru neenga tips in tamil

You may also like...