தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சொத்துக்களுக்கு நடக்கப்போவது இதுதான்

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வீரசேகர இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில்,

அந்த அமைப்புகளின் தலைவர்களிடம் ஏற்கனவே அவற்றின் சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் செயற்பட்டு வந்த 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடைவிதித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like...