கழுத்து கருமை மறைய என்ன செய்ய வேண்டும்; சில டிப்ஸ்

சிலருக்கு முகம் என்ன தான் அழகாகவும், நிறமாகவும் இருந்தாலும் கூட கழுத்தில் உள்ள கருவளையங்கள் அவர்களது அழகையே சீர்குலைப்பதாக இருக்கும்.

கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகிவிடுகிறது. இந்த கருமையை வேறும் சோப்பு கொண்டு போக்குவது கடினம்.

அதே சமயத்தில் நீங்கள் முகத்திற்கு என்ன தான் அலங்காரம் செய்து இருந்தாலும் கூட, கழுத்தில் கருமை இருந்தால் உங்களது முகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.

கழுத்து என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று தான் மனதிற்குள் நினைத்துக் கொள்வார்கள்… இத்தகைய தர்ம சங்கடமான நிலை உங்களுக்கு தேவை தானா?

இந்தப் பதிவில் கழுத்து கருமை மறைய என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.

கழுத்து கருமை மறைய என்ன செய்ய வேண்டும்

பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம்.

இவற்றை பயன்படுத்தி உங்களது கழுத்தில் உள்ள கருமையை போக்கிக் கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வரும் போது நல்ல பலன் கண்கூடாக தெரியும்.

கழுத்து கருமையை போக்க எளிய வழிகள்

உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.

தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும்.

ஆலிவ் எண்ணெயுடன் பயித்தம் பருப்பு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு கலந்து அந்த கலவையை கழுத்தை சுற்றி நல்ல பசை போல் தடவி வர கழுத்தில் கருமை நீங்க பார்க்கலாம்.

இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள்.

அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கருமை நீங்க தொடங்கிவிடும்.

பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

ஆப்பிள் சிடேர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும்.

பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இதனால் கழுத்து கருமையை போக்க முடியும்.

வெண்ணெயுடன் கோதுமை மாவை கலந்து நன்கு பசை போல கழுத்தை சுற்றி , முப்பது நிமிடம் கழித்து கழுத்தை கழுவி தடவி வர கழுத்தின் கருமை நீங்கும்.

You may also like...