போர்ட் சிட்டியில் பணியாற்றும் கப்ராலின் மகன்

தனது புதல்வர் 2016ம் ஆண்டு முதல் கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தில் கடமையாற்றி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது புதல்வர் சிறந்த கல்வி அறிவைக் கொண்டவர் எனவும், அவருக்கு வெளிநாடுகளில் பட்டப்படிப்புகளுக்கான சான்றிதழ்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது மகன் போர்ட் சிட்டியில் கடமையாற்றினால், உங்களுக்கு என்ன பிரச்சினை என அஜித் நிவாரட் கப்ரால், ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது தகனுக்கு எங்கு வேணுமானலும் பணியாற்ற முடியும் என்று அஜித் நிவார்ட் கப்ரால் இன்று தெரிவித்துள்ளார்.

 

You may also like...