பொலிஸாரின் விஷேட திட்டம் – சாரதிகள் அவதானம்

போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸாருக்கு விசேட உபகரணம் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான உபகரணங்களை காவல்துறை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பாவனையுடன் சிலர் வாகனங்களை செலுத்துவதால் அதிக விபத்துக்கள் சம்பவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அவ்வாறு வாகனம் செலுத்துபவர்களை கண்டறிவதற்கான தொழில்நுட்ப உபகரணம் இன்னும் நாட்டில் பயன்படுத்தப்படவில்லை.

குறித்த தொழில்நுட்ப உபகரணங்களின் மாதிரிகள் தற்போது வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் அதனை பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

You may also like...