முத்தையா முரளிதரனின் தற்போதைய நிலை – சற்றுமுன்னர் வௌியான செய்தி

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரனின் தற்போதைய நிலை தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கருத்து வௌியிட்டுள்ளனர்.

அத்துடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் சென்னை அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்தால் ஊடக அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரனின் தற்போதைய நிலை - சற்றுமுன்னர் வௌியான செய்தி

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இரவு 10 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சென்னை, பெங்களூரு அணிகள் சார்பில் பங்கேற்றுள்ளார்.

தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் உள்ளார்.

சாதனைகளின் சொந்தக்காரன் முத்தையா முரளிதரன்

இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்கள் எடுத்த ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர்.

இந்நிலையில், நேற்று முத்தையா முரளிதரன் தனது 48ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவர் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு 10 மணியளவில் இதய பிரச்சனை காரணமாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவருக்குச் சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளதாகவும், விரைவில் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரனின் தற்போதைய நிலை

குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான முந்தைய செய்தி

You may also like...