வயோதிப தந்தையை கடுமையாக தாக்கும் மகளுக்கு நேர்ந்த கதி

வயோதிபர் ஒருவரை வீட்டுக்குள் வரவிடாமல் அவருடைய மகளும், பேரப்பிள்ளையும் இணைந்து தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாரஹேன்பிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மகளும் பேரப்பிள்ளையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இருவரையும் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://twitter.com/i/status/1384503612739522561

You may also like...