திருமதி உலக அழகு ராணி 2020 அயர்லாந்து அழகு ராணிக்கு

2020 திருமதி உலக அழகு ராணியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகு ராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகு ராணி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட, அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் 2020 உலக அழகு ராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 2021 இலங்கை திருமதி அழகிப் போட்டியின் முடிவில் இடம்பெற்ற குழப்பநிலை காரணமாக கரோலைன் ஜூரி தனது திருமதி உலக அழகி பட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...