உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டை நினைவை முன்னிட்டு இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இம்பெற்று இரண்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வவுனியா இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்களின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி ஆத்ம சாந்திப் பிராத்தனை இடம்பெற்றது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், விருந்தினர் வீடுதிகள் என்பவற்றில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

அத்தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்த உறவுகளின் நினைவாக விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களிலும் இடம்பெற்றது.

அந்தவகையில் இன்று காலை 8.45 மணிக்கு மரணித்தவர்கள் நினைவாகவும், ஆத்ம சாந்தி வேண்டியும் வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயக் குரு பிரபாகரக்குருக்கள் தலைமையில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

இதில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விசேட வழிபாட்டில் ஈடுபட்டதுடன் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தனர்.

You may also like...