இன்று நள்ளிரவு முதல் லொக்டவுன் செய்யப்படும் பிரதேசம்

குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இன்று (22) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

You may also like...