பல்கலைக்கழக மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம்திகதி திறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like...