மார்பக வலி காரணம்; மார்பக வலி குறைய என்ன செய்யலாம்

மார்பக வலி காரணம் என்ன? மார்பக வலி குறைய என்ன செய்வது? என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்

மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 70% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

50 வயதை கடந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனை உண்டு. இது எப்போது வரும் என்று பார்த்தால் பெரும்பாலும் மாதவிடாய் காலங்களில் என்று சொல்லலாம்.

மார்பக வலி காரணம் – மார்பக வலி ஏற்பட காரணம்

உங்கள் மார்பகத்தில் ஏற்படும் வலியானது, மாதவிடாய் சுழற்சி, நோய்த்தொற்றுக்கள், அழற்சி (வீக்கம்), தாய்ப்பால் ஊட்டுதல், இன்ன பிற காரணங்களால் ஏற்படக் கூடும்.

நீங்கள் ஒன்று அல்லது இரண்டு மார்பகத்திலும் வலியை உணரக் கூடும்.

வழக்கமாக, மார்பக வலி என்பது ஒரு தீவிரமான பிரச்சினை அல்ல. பெண்கள் அடிக்கடி இது மார்பகப் புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் எனக் கவலைப்படுவர், ஆனால் அவ்வாறு இருப்பது அரிதானது ஆகும்.

இருந்தாலும், உடனடியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறுதல் அறிவுறுத்தத்தக்கது ஆகும்.

ஹார்மோன் பரிசோதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் போன்றவைகளால் மார்பக வலிக்கான காரணத்தை கண்டறியலாம்.

சிலநேரங்களில் மார்பக வலி, அடியில் உள்ள மார்பக தசையில் ஏற்படும் ஒரு காயம், அழற்சி அல்லது நோய்த்தொற்றின் காரணமாகக் கூட உணரப்படலாம்.

இந்த வலி, மார்பகத் தசையில் இருந்து உங்கள் மார்புக்குப் பரவக் கூடும். முழுமையான சிகிச்சை பெற உங்கள் மருத்துவரை சந்திக்கவும்.

மார்பகங்களில் அசாதாரணமான வகையில் திரவம் – நிரம்பிய கட்டிகள் தோன்றுவதும் கூட, உங்கள் மார்பகங்களில் ஏற்படும் வலி, அசௌகரியம், மற்றும் கனமான தன்மை ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கலாம்.

உங்கள் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.

பொதுவாக மாதவிலக்கையொட்டி ஏற்படும் வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் நிலவும் சமச்சீரின்மையே காரணம். சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி) கொண்ட பெண்களுக்கு வலியோடு மார்பில் நீரும் கட்டலாம்.

பிசிஓடி க்கான அறிகுறி உங்கள் உடலில் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக எடை, மாதவிலக்கு கோளாறு, தேவையற்ற அதிக ரோமங்கள் வளருதல் போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள்.

இந்த பாதிப்பு இருந்தாலும் கவலைப்படாதீர். மருந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளால் தீர்வு கண்டுவிடலாம்.

மார்பக வலி குறைய என்ன செய்யலாம்

பல பெண்களுக்கு பரவலாக இருக்கும் இந்த மார்பு வலிக்கு என்ன காரணம்? இவை ஆபத்தை உண்டாக்குமா? என்ன செய்யலாம்? இதை தவிர்க்க முடியுமா? என்பதை பார்க்கலாம்.

உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.

மனஅழுத்தம் உருவானால் ஹார்மோன் சீரற்றதன்மை உருவாகி அதனாலும் மார்பகங்கள் வலிக்கும். பைப்ரோசிஸ்டிக் டிசீஸ் என்ற பாதிப்பு தோன்றினாலும் இரு மார்பகங்களும் வலிக்கும்.

இந்த வலி கை பகுதிகளிலும் பரவும். இது போன்ற வலியும் மாதவிலக்கு நாட்களிலே தோன்றும்.

நீங்கள் செய்யும் வேலையாலும் மார்பு வலி தோன்றலாம். வெகுநேரம் குனிந்த நின்றால் மார்புகள் தொங்கி, அந்த பகுதி தசைகள் சோர்ந்து போனாலும் வலிக்கும்.

அதனால் தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை பார்ப்பது அதிக நேரம் கவிழ்ந்து கிடப்பது போன்றவற்றையும் தவிருங்கள்.

சீரற்ற சாலைகளில் அதிக தூர இரு சக்கர வாகன பயணத்தையும் முடிந்த அளவு குறையுங்கள்.

உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் வைட்டமின் சத்துகள் நிறைந்த மாத்திரைகளும் எடுத்து கொள்வதன் மூலம் மார்பு வலியை சரி செய்ய முடியும்.

முதலில் மார்பு வலியை கண்டு பயப்படாமல் அவை தொடர்ந்து இருக்கும் போது மருத்துவரை அணு குவது நல்லது சுய பரிசோதனை, மேமோகிராம், .ஃபைப்ரோ அடினோமா, ஃபைப்ரொ அடினோசிஸ் போன்ற பரிசோதனைகள் மூலம் மார்பகத்தில் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை யும் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.

மாத்திரைகள், பிஸியோதெரபி, உடற்பயிற்சி மூலமே இதை எளிதாக சரிசெய்துவிடலாம் என்பதால் பெண்கள் மார்பக வலியை கண்டு அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

உணவு பழக்கங்களில் மாற்றங்களை கடைபிடிப்பதோடு வாரத்துக்கு மூன்று நாள் உடற்பயிற்சி செய்வதும் கூட இந்த பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்கும்.

இவையெல்லாம் செய்தாலே மார்பு வலி பிரச்சனை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

You may also like...