சஹ்ரான் ஹாசிமின் போதனைகளில் பங்கேற்ற மூன்று பேர் கைது

தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் போதனைகளில் பற்கேற்ற மூன்று பேர் குளியாப்பிட்டி – கெக்குனகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட தரப்பினரால் 2018ஆம் ஆண்டு பல பகுதிகளில் பயங்கரவாதம் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் சஹ்ரான் ஹசீமின் மாமனாரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like...